ஸ்டாலின் மீது விரைவில் வழக்கு?-
சென்னை:
முன்னாள் சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் போடுவது தொடர்பாக ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்துவரும் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர்கலைவாணன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஹைதராபாத் சென்று ஓய்வு எடுத்து வருகிறார். அவருடன் தோழி சசிகலாவும் சென்றுள்ளார்.இந்நிலையில் கலைவாணன் திடீரென்று ஹைதராபாத் சென்றார்.
ஸ்டாலின் மீது புதிய வழக்குத் தொடுப்பது தொடர்பாகவே முதல்வருடன் ஆலோசனை நடத்த கலைவாணன்ஹைதராபாத் சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
அதை கலைவாணன் தற்போது மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மாநகராட்சி நிர்வாகப் பணி சீர்திருத்தம் மற்றும் பசுமையாக்கல் திட்டம் தொடர்பாக ஹைதராபாத் மாநகராட்சிஅதிகாரிகளுடன் விவாதிப்பதற்காகவே சில அதிகாரிகளுடன் அங்கு சென்றிருந்தேன்.
ஸ்டாலின் மீது கேஸ் போடுவது தொடர்பாக விவாதிக்க முதல்வரை சந்திக்க நான் சென்றிருந்ததாகவெளியாகியுள்ள செய்திகள் உண்மையானவை அல்ல, சரியான செய்தியும் அல்ல என்று கூறியுள்ளார்கலைவாணன்.
இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாநகராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தேதியாகராஜன் பேசுகையில், ஸ்டாலின் மீது மாநகராட்சிக் பள்ளிக் கட்டடங்கள் கட்டியதில் நடந்துள்ளமுறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பான ஆய்வு நடந்து வருவதாக கூறியதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications