40,000 இந்தியர்கள் வெளியேற யு.ஏ.இ. 4 மாதம் கெடு
துபாய்:
முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.இ.) தங்கியுள்ள 40,000 இந்தியர்கள்4 மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.
இவர்களில் சுமார் 40,000 பேர் சட்ட விரோதமாகத் தங்கியுள்ளதை அந்நாட்டு அரசு சமீபத்தில் கண்டுபிடித்தது.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிப்பதாகக் கூறியுள்ள யு.ஏ.இ.,அதற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்தச் செலவிலோ, அல்லது இந்தியத் தூதரகத்தின் செலவிலோதான் நாடுதிரும்ப வேண்டும் என்றும் யு.ஏ.இ. கூறியுள்ளது.
கையில் பணமே இல்லாமல் தவிக்கும் ஒரு சிலருக்கு வேண்டுமானால் தங்கள் அரசு உதவும் என்றும் அந்நாட்டின்உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு "இந்தியன் ஏர்லைன்ஸ்" விமான நிறுவனம் கட்டணசலுகைகளை அறிவித்துள்ளது.
விசா இன்றி இந்தியாவில் 11,200 பாகிஸ்தானியர்கள்:
இதற்கிடையே இந்தியாவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியுள்ள சுமார் 11,200 பாகிஸ்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
உரிய விசாக்களுடன் இந்தியாவுக்குள் நுழையும் பாகிஸ்தானியர்கள் பலர் இங்கேயே தங்கி விடுகின்றனர்.
விசா காலம் முடிந்த பின்னரும் வெளியேறாமல் இந்தியாவிலேயே இருந்து கொண்டு பயங்கரவாதச் செயல்களைஅவர்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு சுமார் 11,200 பாகிஸ்தானியர்கள் சட்ட விரோதமாகத் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில்பெரும்பாலானவர்கள் போலியான முகவரிகளைக் கொடுத்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் மாநில அரசுகள் மூலம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் சுற்றுலா விசாக்களும் கடுமையாக்கப்படும்என்றார் ராவ்.
-->
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications