வைகோ மீது "பொடா" குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுகபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக இன்று பொடா நீதிமன்றத்தில் 518 பக்கங்கள் கொண்டகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 11ம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார் வைகோ. அதற்கு இரு நாட்களுக்கு முன்பே ஒன்பது மதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் ஒன்பது பேருக்கும் இன்று (டிசம்பர் 30) வரைகாவலை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
மேலும் இன்னும் ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்துநீதிபதி ராஜேந்திரன் கோபத்துடன் கேட்டார். அடுத்தகட்ட விசாரணையின்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
பொடா சட்ட விதிமுறைகளின்படி இவர்கள் மீது 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும். ஆனால் இதுவரை அது தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. வரும் ஜனவரி 7ம் தேதிதான் 180 நாட்கள்முடிவடையவுள்ளது.
இந்நிலையில் வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினரும் இன்று சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடாநீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது வைகோவுக்கு எதிராக க்யூ பிரிவு போலீசார் 518 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல்செய்தனர். மேலும் மதிமுக பிரமுகர்கள் எட்டு பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
க்யூ பிரிவு டி.எஸ்.பி. இந்தக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தார். இந்தக் குற்றப்பத்திரிக்கையில் 115சாட்சியங்கள், 106 ஆவணங்கள் மற்றும் 154 எழுத்துப் பூர்வமான சாட்சியங்கள் ஆகியவைதெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடியோ மற்றும் ஆடியோ கேசட்டுகளும் ஆதாரங்களாகசமர்ப்பக்கப்பட்டன.
பொடா சட்டம் 21(2) மற்றும் 21(3) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வைகோ உள்பட ஒன்பது மதிமுகவினரும் இனிஜாமீனில் வெளிவருவதும் சற்று சிரமம்தான்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 2ம் தேதிக்குஒத்திவைத்த நீதிபதி ராஜேந்திரன், வைகோ உள்ளிட்ட ஒன்பது பேரையும் அன்று மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி பொடா நீதிமன்றத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பொடா சட்டத்தின் சர்ச்சைக்குரிய இந்தப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று வைகோ ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications