வைகோ கைதை எதிர்த்து கையெழுத்திட மறுப்பா?- பா.ஜ.க. விளக்கம்
சென்னை:
வைகோ கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாங்கள் நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் தொடர்பாக மதிமுகவினர்இதுவரை எங்களை அணுகவில்லை என்று பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் எச். ராஜா கூறினார்.
வைகோ கைதை எதிர்த்து மதிமுக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதற்கான படிவத்தில்ராஜா கையெழுத்திட மறுத்து விட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து மதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மதிமுகவின் இந்தக் குற்றச்சாட்டை ராஜா வன்மையாக மறுத்தார். இது தொடர்பாக ஒரு தமிழ்பத்திரிக்கை நிருபரிடம் அவர் கூறுகையில்,
இந்தக் கையெழுத்து இயக்கப் படிவத்தில் பா.ஜ.க. கையெழுத்திடுமா என்று சமீபத்தில் நிருபர்கள் கேட்டனர்.அந்தப் படிவத்தில் உள்ள வாசகங்களைப் படித்த பின்னரே முடிவு செய்யப்படும் என்றுதான் நான் பதில் கூறினேன்.
பொடா சட்டத்திற்கு எதிராகவோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவோ அந்தப் படிவத்தில் வாசகங்கள்எழுதப்பட்டிருந்தால் நாங்கள் எப்படிக் கையெழுத்திட முடியும்?
ஆனால் என்னிடமோ, பா.ஜ.கவின் மூத்த தலைவர்களிடமோ கையெழுத்து கோரி மதிமுகவினர் வரவேயில்லை.
வைகோ விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எல்லாம் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும்இல்லை என்றார் ராஜா.
இந்நிலையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கப் படிவத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன்நேற்று கையெழுத்துப் போட்டார். இப்படிவத்தில் திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஏற்கனவேகையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications