கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: இஸ்லாமிய அமைப்பு காரணம்
சென்னை:
கோயம்புத்தூர் பஸ் டிப்போவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் உப்பிலிப்பாளையம் பஸ் டிப்போவில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு பஸ்சின்மேற்பகுதி எரிந்தது.
மேலும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்பு உள்ள எஸ்.டி.டி. பூத்தில் ஒரு பையில் ஜெலட்டின் குச்சிகளும்,டெட்டனேட்டர்களும், டைம் பாம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சில பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்விடுக்கப்பட்டன.
அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் கோயம்புத்தூர் நகர மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
"இஸ்லாமிய சேவக் சங்கம்":
இந்நிலையில் கேரளாவிலிருந்து செயல்பட்டு வரும் "இஸ்லாமிய சேவக் சங்கம்" என்ற அமைப்புதான் இந்தச்சம்பவங்களுக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள மக்கள் குடியரசுக் கட்சியின்தலைவரான அப்துல் நாசர் மதானிக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்துச் சென்ற நபர்களை போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் தெரிகிறது.
பாதுகாப்பு தீவிரம்:
அடுத்தடுத்து நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து பத்திரிக்கைஅலுவலகங்களுக்கும் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ள போலீசார்,சந்தேகப்படும்படியாக நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாகப் போலீசாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவை எம்.பி. கண்டனம்:
இதற்கிடையே கோயம்புத்தூர் எம்.பியான ராதாகிருஷ்ணன் இந்தத் தொடர் சம்பவங்களைக் கடுமையாகக்கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், வரும்நாடாளுமன்றக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களை முஸ்லீம் தலைவர்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன்கேட்டுக் கொண்டார்.
இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து பொடா சட்டத்தின் கீழ் அவர்களைக்கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று அவர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications