பவானியில் அணை: எதிர்த்து மதுரையில் போராட்டம்
மதுரை:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து மதுரையில் மனித உரிமைக்கழகத்தினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாக கேரள மாநிலம் வழியாக ஓடி, மீண்டும் தமிழகத்தின் ஈரோடுமாவட்டத்தில் பவானி ஆறு பாய்கிறது.
இந்த ஆற்றின் குறுக்கே தங்கள் பகுதியில் அணை ஒன்றைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் அந்தோனிக்குதமிழக முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் கேரள அரசு பவானியின் குறுக்கை அணையைக் கட்டுவதற்குத் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.அணையைக் கட்டியே தீருவோம் என்று அம்மாநில அமைச்சர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள அரசின் அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து மதுரையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மனித உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும், வேறு பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டனப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அணை கட்டப்பட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து அப்போது அவர்கள் பொதுமக்களுக்குவிளக்கம் அளித்தனர்.
பவானியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தைக் கேரள அரசு கைவிடவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறுபோராட்டங்களை நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications