தற்கொலை தான் ஒரே வழி: காவிரி டெல்டா விவசாயிகள் குமுறல்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

சம்பா நெல்லைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேஇல்லை என காவிரி டெல்டா விவசாயிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டு வரும் சம்பா நெல் நீர் இல்லாமல் வாட ஆரம்பித்துள்ளது. இதனைக் காப்பாற்றமழை பெய்யாத நிலையில் மேட்டூர் அணையைத் தான் விவசாயிகள் நம்பி இருந்தனர்.

ஆனால், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நீர் வராததால் மேட்டூரும் வற்றிவிட்டது. இதனால் நீர் திறந்துவிடுவதுநிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் காய்ந்து வரும் பயிர்களை மாடுகளாவது உண்ணட்டும் என்று தங்கள் கால்நடைகளை வயலில் மேய விட ஆரம்பித்துள்ளனர்தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர் மாவட்ட விவசாயிகள்.

இது குறித்து விவசாய அமைப்புகள் கூறுகையில், பயிரைத் தான் காப்பாற்ற முடியவில்லை. காயும் பயிர்களை உண்ணவிட்டுகால்நடைகளையாவது காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். காப்பாற்றப்படும் இந்தக் கால்நடைகளையாவது விற்று சில மாதங்கள்எங்களால் வயிறு நிரப்ப முடியும் என்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், குறுவைப் பயிறும் போச்சு, சம்பா நெல் நாற்றை கடனுக்கு வாங்கித் தான் நட்டுள்ளோம். இதைக் காப்பாற்றமுடியாவிட்டால் பெரும் கடனில் மூழ்குவோம். இதனால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வழியில்லை என்றனர்.

குறுவை, சம்பா பயிர்கள் இழப்பால் மட்டும் தமிழகத்துக்கு ரூ. 5,000 கோடி அளவுக்கு நஷ்டம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் இளங்கோ இன்று விவசாய சங்கத்தினருடன் அவரச ஆலோசனையில் ஈடுபட்டார். அவரிடம்பேசிய விவசாயிகள், மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட சொற்ப நீர் கூட சரியாக எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இதில்தங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் அரசியல் செய்துவிட்டனர்.

திருவாருரில் பயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் தினமும் 20,000 கன அடி நீர் தொடர்ந்து 4 நாட்களுக்குத் திறந்துவிடப்பட்டால் தான்முடியும். எப்படியாவது மேட்டூரில் இருந்து இந்த நீரை வரச் செய்யுங்கள் என்று கெஞ்சினர்.

தன்னால் முடிந்ததைத் செய்வதாக அவர்களுக்கு கலெக்டர் உறுதிமொழி அளித்துள்ளார்.

இந் நிலையில் வரும் 4ம் தேதி கூட்டத் திட்டமிடப்பட்டிருந்த காவிரி ஆணையக் கூட்டம் வரும் 13ம் தேதி தான் கூட்டப்படும் என்றுதெரிகிறது. முடிந்தவரை சீக்கிரம் இக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு உடனே நீர் கிடைக்கச் செய்தால்பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+