அரசு டாக்டர்கள் அலட்சியம்: பல் வலியால் துடித்த சிறுமி பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பல் வலிக்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறுமி உரிய நேரத்தில்சிகிச்சை அளிக்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் அலட்சியம் காரணமாகப் பிரச்சினைகள் ஏற்படுவது தமிழகத்தில்சகஜமாகி விட்டது.

சமீபத்தில் சேலத்தில் தொடர்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டடாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முயற்சித்தது.

ஆனால் வேலைநிறுத்தம் செய்வோம் என்று டாக்டர்கள் மிரட்டியதால், அவர்கள் மீதான நடவடிக்கைநிறுத்தப்பட்டது. வெறும் இடமாற்றத்துடன் தவறு செய்த டாக்டர்கள் தப்பினர்.

இந்நிலையில் சென்னையிலும் இப்படி ஒரு பரிதாப சாவு நடந்துள்ளது. அம்பத்தூரைச் சேர்ந்த சிறுமி மீனாவுக்குசில நாட்களாகப் பல் வலி இருந்து வந்தது. இதையடுத்து வெளி நோயாளியாக கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வலி அதிகரிக்கவே, மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்மீனா.

நேற்று இரவு மீனாவின் பல் அகற்றப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதில் தவறு நடந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவர்கள் குமுறியுள்ளனர்.

இதையடுத்து உடலை வாங்க மறுத்து சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவமனை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்திய பின் அவர்கள் கலைந்துசென்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+