கோபாலை கடத்த போலீசார் முயற்சி: "நக்கீரன்" இணை ஆசிரியர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

"நக்கீரன்" ஆசிரியர் கோபாலை கடத்திச் சென்று அவர் மீது பொய் வழக்குப் போட தமிழக அரசும்,காவல்துறையும் முயற்சிப்பதாக அப்பத்திரிக்கையின் இணை ஆசிரியர் காமராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த டிசம்பர் 27ம் தேதியிலிருந்தே கோபாலின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் "நக்கீரன்" பத்திரிக்கை நிருபர்களின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்துவருகிறார்கள்.

மேலும் நிருபர்களின் குடும்பத்தினரையும் அவ்வப்போது போலீசார் மிரட்டி வருகிறார்கள்.

கோபாலை கடத்திச் சென்று அவர் மீது பொய் வழக்குப் போட போலீஸாரும், அரசும் முடிவு செய்து செயல்பட்டுவருவது போலத் தோன்றுகிறது. ஈரோடு போலீஸார், சி.பி.சி.ஐ.டி. மற்றும் க்யூ பிரிவு போலீஸார் இந்தப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கோபாலின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் போலீஸாரிடம் "ஏன் பின் தொடருகிறீர்கள்?" என்று கேட்டால்ஒன்றும் சொல்லாமல் நழுவி விடுகிறார்கள். கோபாலைக் கைது செய்ய விரும்பினால், கோர்ட்டிலிருந்து வாரண்ட்பெற்று தாராளமாக செய்யலாம்.

ஆனால் போலீஸாரின் தற்போதைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவையாக உள்ளன. கோபாலைசட்டவிரோதமாக கைது செய்யவே அவர்கள் முயல்வதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார் காமராஜ்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க கோபாலுடன் சேர்ந்து பலமுறை காட்டுக்குள் சென்றுள்ள "நக்கீரன்" நிருபர்சிவசுப்ரமணியம் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+