தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் முற்றுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாணியம்பாடியில் நடந்த இடைத் தேர்தலில் நடுநிலை வகிக்கிறோம் என்ற போர்வையில் அதிமுகவை பா.ஜ.க.ஆதரித்தது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்று சந்தேகப்பட்டால் தேசிய ஜனநாயக்கூட்டணியிலிருந்து திமுக தாராளமாக வெளியேறலாம் என்று பா.ஜ.க. கூறியுள்ளது. தனது மகளிர் அணித் துணைத்தலைவியான நடிகை விஜயசாந்தி மூலம் கருணாநிதியைத் தாக்கியுள்ளது பா.ஜ.க.

கடந்த சில நாட்களாக இரு கட்சிகளும் மாறி மாறிப் புகார்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.

அதிமுகவுடன் கூட்டணி சேர பா.ஜ.க. ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால்இதை மறுத்த பா.ஜ.கவின் தேசியப் பொதுச் செயலாளர் இல. கணேசன், நாங்கள் எதைச் செய்தாலும்வெளிப்படையாகவே செய்வோம் என்றார்.

இந்நிலையில் இன்று மீண்டும் பா.ஜ.கவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார் கருணாநிதி. இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த வாணியம்பாடி இடைத் தேர்தலின்போது பா.ஜ.க. இந்து வேட்பாளர்ஒருவரை அங்கு நிறுத்த முடிவு செய்திருந்தது.

ஆனால், அதற்குள் அதிமுக சார்பில் அங்கு ஒரு இந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இதையடுத்தே வாணியம்பாடிதொகுதி தேர்தலில் நடுநிலை வகிப்பதாக பா.ஜ.க. அறிவித்தது.

அதிமுக வேட்பாளர் எப்படியும் வெற்றி பெறுவார் என்று தெரிந்த பின்னரே அங்கு நடுநிலை வகிக்க முடிவுசெய்ததாக இல. கணேசனே நேற்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் பா.ஜ.க. பெரும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதும் தற்போது தெரிய வந்துள்ளது. வாணியம்பாடியில்திமுக சார்பில் போட்டியிட்ட நாகூர் ஹனீபா வெற்றி பெறுவதையும் திட்டம்போட்டு தடுத்துவிட்டது பா.ஜ.க.

எப்படியாவது திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தத் தொகுதியில் நடுநிலை வகிப்பதாகபா.ஜ.க. அறிவித்தது.

இப்படி ஒரு ஏமாற்று வேலையைச் செய்து விட்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சில தலைவர்கள் திமுகவைக் கடுமையானசொற்களால் திட்டி வருகிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டத்தில் மாறுதல் கொண்டு வர பா.ஜ.க. முயன்றால் அக் கூட்டணியில்இருந்து திமுக விலகும். அது வரை நாங்கள் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் இருப்போம்.

இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

விஜயசாந்தி மூலம் பா.ஜ.க. பாய்ச்சல்:

இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி சேரப் போவதாக பா.ஜ.க. மீது சந்தேகப்பட்டால் தேசிய ஜனநாயகக்கூட்டணியை விட்டு திமுக தாராளமாக வெளியேறலாம் என்று பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்திகூறியுள்ளார்.

பா.ஜ.க. மகளிரணியின் தேசியத் துணைத் தலைவரான விஜயசாந்தி இன்று சென்னையில் வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில்,

மத்தியில் ஒரு நிலையும் மாநிலத்தில் ஒரு நிலையும் கொண்டுள்ள திமுகவைப் போல எந்த ஒரு கட்சியும் தேசியஜனநாயகக் கூட்டணியில் இல்லை.

எப்படியாவது மத்திய அரசில் அமைச்சர் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்தான்இன்னும் கூட்டணியை விட்டு திமுக இன்னும் வெளியேறாமலேயே உள்ளது.

அதிமுகவுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கப் போகிறது என்று உண்மையிலேயே சந்தேகப்பட்டால், தைரியமாகக்கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியதுதானே?

அதை விட்டுவிட்டு ஏன் இப்படி மதில் மேல் நிற்கும் பூனையைப் போல் தவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் விஜயசாந்தி.

அதிமுகவுடன் பா.ஜ.க. கூட்டணி சேர வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே விஜயசாந்தி ஆதரித்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவிலிருந்து சென்னை வரும் போதெல்லாம் அவர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார்என்பதும் குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+