மதுரையில் இத்தாலி சுற்றுலா பயணிகளின் சூட்கேஸ்கள் திருட்டு
மதுரை:
மதுரைக்கு வந்த இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தங்களது வேனின் மேல் வைத்திருந்த சூட்கேஸ் உள்ளிட்டபொருட்களை யாரோ சிலர் திருடி விட்டனர்.
இத்தாலியைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணிகள் குழு மதுரை வந்திருந்தது. டெம்போ டிராவலர் வேனில் அவர்கள்வந்திருந்தனர்.
மதுரை அருகே ஒரு போலீஸ் செக்போஸ்ட்டில் சோதனைக்காக போலீஸார் அவர்களது வண்டியை நிறுத்தினர்.அப்போதுதான் வேனின் மேல் பகுதியில் வைத்திருந்த சூட்கேஸ் போன்ற பொருட்களைக் காணவில்லை என்பதுஅவர்களுக்குத் தெரிய வந்தது.
எந்த இடத்தில் வைத்து சூட்கேஸ்கள் திருடப்பட்டன என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற திருட்டுக்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆள்அரவமற்ற சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் மேல் பகுதியில் திருடர்கள் சத்தமில்லாமல் குதித்துஅங்கிருக்கும் பொருட்களை திருடிக் கொண்டு சத்தமில்லாமலேயே குதித்து தப்பி விடுகின்றனர்.
சந்தோஷமாக சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்களை இந்தத் திருட்டு மிகவும் வெறுப்படையவைத்து விட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி திருடியர்வளைத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications