தாமரைக்கனியை தாக்கிய வழக்கு: வைகோ மனு தள்ளுபடி
நாகப்பட்டினம்:
முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியைத் தாக்கிய வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை நாகப்பட்டினம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1984ம் ஆண்டு மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் வேனில் வந்து கொண்டிருந்த தாமரைக்கனிஉள்ளிட்ட அதிமுகவினரைத் தாக்கியதாக வைகோ, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி உள்ளிட்டவர்கள் மீதுவழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக சமீபத்தில் வைகோ நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, தன் மீது போதுமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்பதால் இவ்வழக்கை நடத்த வேண்டியஅவசியமில்லை என்றும் அதனால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வைகோ மனு ஒன்றைத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர்சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ, இவ்வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வைகோவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் வரும் 7ம் தேதிக்கு இவ்வழக்கின்விசாரணையை ஒத்திவைத்தார்.
-->












Click it and Unblock the Notifications