வீரப்பன்: டெல்லியில் நாளை முக்கிய ஆலோசனை
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பான புதிய செயல் திட்டங்களை வகுப்பத குறித்து தமிழக,கர்நாடக அதிரடிப்படை தலைவர்களுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்தவுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பனைப் பிடிப்பதுதான் இந்த ஆண்டின் எங்களுடைய முக்கியக் குறிக்கோள். புத்தாண்டுக்காக இன்று காலைஎன்னை வாழ்த்த வந்த போலீஸ் அதிகாரிகளிடமும் இத்ைததான் நான் வலியுறுத்தினேன்.
மத்திய உள்துறை அமைச்சகம் நாளை ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படைத்தலைவர்களும், உள்துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் வீரப்பனைப் பிடிப்பதற்கானப் புதிய வியூகங்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்படும்.
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினருக்குக் கூடுதல் ஆயுதங்கள் அளிப்பது குறித்தும்நாளை மத்திய அரசு அறிவிக்கும். மேலும் அதிரடிப்படையினருக்கு உதவுவதற்காக மத்திய அரசு கூடுதல்படையை அனுப்புமா என்பது குறித்தும் நாளை முடிவு செய்யப்படவுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு டெல்லியில் நடத்தவுள்ள கூட்டம் குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரும்நேற்றே நிருபர்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பெங்களூரில் நேற்று நிருபர்களிடம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பேசுகையில், கடத்தப்பட்டமுன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்கு உதவ தமிழக அரசு முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
-->












Click it and Unblock the Notifications