சென்னை நகரில் மாடுகள் வளர்க்கத் தடை!
சென்னை:
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மாடுகள் வளர்க்கவும், ரோடுகளில் மாடுகள் திரியவும் முழுமையான தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதத்திற்குள் சென்னை நகருக்குள் உள்ள மாடுகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் "பால்காலனி" பகுதிக்கு அப்புறப்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கலைவாணன் கூறினார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சென்னை நகருக்குள் மாடுகள் வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் சுமார் 12,000மாடுகள் நகரை விட்டு வெளியேற்றப்பட்டு விடும்.
நகருக்குள் உள்ள மாடுகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் புறநகர்ப் பகுதியில் அமையவுள்ள "பால்காலனி"க்கு மாற்றப்படும்.
மாடுகளை வெளியேற்றுவது தொடர்பாக வரும் 10ம் தேதி விலங்கு உமையாளர் சங்கப் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இந்த மாடுகள் அனைத்தும் "பால் காலனி" பகுதிக்கு மாற்றப்படுவது குறித்து அப்போது பேசப்படும். அதன் பிறகுமாடுகள் அனைத்தும் இடம் மாற்றப்படும்.
மாடுகள் அகற்றப்பட்ட பின்னர் நகரில் கொசுக்கள் தொல்லையும் பெருமளவில் குறையும் என்றார் கலைவாணன்.
சென்னை புறநகர்ப் பகுதிகளான வட மங்கலம், எருமவெட்டிப் பாளையம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகியஇடங்களில் ஒன்றில்தான் "பால் காலனி" அமையவுள்ளது.
-->












Click it and Unblock the Notifications