36 தமிழக மீனவர்களைக் கடத்திய இலங்கை மீனவர்கள்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச்சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த 28ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 36 பேர் மட்டும் கரைக்குத் திரும்பவில்லை.அவர்கள் சென்ற 9 விசைப் படகுகளையும் காணவில்லை.
இதையடுத்து இலங்கை கடற்படையினர்தான் அவர்களைப் பிடித்துச் சென்று விட்டதாகக் கருதப்பட்டது.அவர்களைத் தேடும் பணியில் இந்தியக் கடலோரக் காவற்படையினரும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மற்றமீனவர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இலங்கைக் கடற்படையினர்தான் தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்று விட்டதாகத் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் அருகே உள்ள பள்ளிகுடா என்ற தங்கள் எல்லையில் வந்து மீன் பிடித்ததால் தமிழக மீனவர்களைக்கடத்திக் கொண்டு போய் இலங்கை கடற்படையினரிடம் அவர்களை ஒப்படைத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாகவும், இலங்கை அரசு மூலமாகவும் 36மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் வாடிக் கொண்டிருந்த 62மீனவர்களில் 44 மீனவர்கள் மட்டும்தான் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.எஞ்சிய மீனவர்கள் இன்னும் இலங்கைச் சிறையில்தான் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications