• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஜ்பாயின் இந்துத்துவாவுக்கு கருணாநிதியின் பதில் திராவிடத்துவா

By Staff
|

சென்னை:

ஜாதிப் பாகுபாடுகளை ஆதரிக்கும் இந்துத்துவாவை, எந்தவிதமான விளக்கம் தந்து திணிக்க முயன்றாலும் அதை திமுக ஏற்காது,ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கடந்த 4 நாட்களாக கோவாவில் ஓய்வெடுத்து வந்த பிரதமர் வாஜ்பாய் அங்கிருந்த வண்ணம் கோவா நினைவுகள் என்ற பெயரில்கட்டுரைகள் எழுதினார். அதில் இந்துத்துவா குறித்து தனது கருத்தை எடுத்துச் சொன்னார்.

இந்துத்துவா என்பது இந்து மதத்தைக் குறிக்காது என்றும் அது சம தர்ம சிந்தனையைக் குறிப்பதாகும் என்றும் கூறியிருந்தார்.இதனால் இந்துத்துவாவை மத்திய அரசு ஆதரிப்பது தவறு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்துத்துவா குறித்து புதிய விளக்கம் தந்துவிட்டால் மட்டும் அது புதிதாகிவிடாது. பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. ஆகியமத வெறியைத் தூண்டும் அமைப்புகள் சொல்வைத் தான் பிரதமரும் பேச ஆரம்பித்துள்ளார். இதை ஏற்க முடியாது என கூட்டணிக்கட்சியான பிஜூ ஜனதா தளம் கூறியுள்ளது.

அதே போல சமதா கட்சியும் இதனை எதிர்த்துள்ளது. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதசார்பின்மையைத் தான் நாட்டின்பிரதமராக இருப்பவர் குறிப்பிட்டுப் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு இந்து மத அமைப்புகளின் கொள்கையை பிரதமர்எதிரொலிக்கக் கூடாது என்று அக் கட்சி கூறியுள்ளது.

இந் நிலையில் வாஜ்பாயின் கருத்துக்கு திமுகவிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஜாதி, மத வேறுபாடுகளைத் தூண்டும் கருத்துக்களையும், மனித உரிமைகளை, ஜாதியைச் சொல்லி மனித நேயததைகேவலப்படுத்தும் மதக் கொள்கைகைளை திராவிடத்துவா என்று பெயர் சொல்லி அழைத்தாலும் கூட அதை திமுக ஏற்காது.

எனது இந்தக் கருத்து மூலம் இந்துக்கள் குறித்து நான் கூறியதாகத் திரிக்கப்பட்ட விவாதங்களுக்கு முடிவு கட்டுவதாகநினைக்கிறேன்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத எந்தக் கருத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிமதசார்பற்றது. அதன் செயல் திட்டத்தை மத்திய அரசு கடைபிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அதைவிட்டுவிட்டு தங்களது மதக் கொள்கைகளுக்குத் திரும்பி அதற்கு விளக்கங்களும் தரப்பட்டால் அதை திமுக ஏற்காது.

தமிழக பா.ஜ.கவைப் பொறுத்தவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்னரே அதிமுகவுடன் கூட்டணியைத் தொடங்கிவிட்டது. சட்டப்பேரவையில் முதலில் சிக்னல் காட்டினார்கள். பின்னர் வாணியம்பாடி தேர்தலில் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைவெல்லவிடக் கூடாது என்று அதிமுகவும் பா.ஜ.கவும் ரகசிய கூட்டணி அமைத்தன.

வாணியம்பாடியில் ஒரு இந்து தான் வெல்ல வேண்டும் என்பதற்காக அதிமுகவை ஆதரித்தோம் என்று அக் கட்சியின் தேசியச்செயலாளர் இல.கணேசனே கூறிவிட்டார். இதன்மூலம் தமிழகத்தில் குறுகிய மனப்பான்மையை இந்த இரு கட்சிகளும் கூட்டுசேர்ந்து வளர்க்கத் திட்டமிட்டுவிட்டது தெளிவாகிவிட்டது.

டான்சி நிலத்தைத் திரும்பித் தந்துவிட்டதால் மட்டும் ஜெயலலிதா செய்த தவறு சரியாகிவிடாது. இதை யோசிக்க வேண்டியவர்கள்(நீதிமன்றம்) யோசிப்பார்கள்.

அதே போல கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த சுடுகாட்டு ஊழல் தொடர்பாக உயர் நீதிமன்றம் சொல்லித் தான் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. இப்போது இந்த ஊழல் விசாரணைக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. இது நீதிமன்ற அவமதிப்பாஇல்லையா என்று எனக்குத் தெரியாது என்றார் கருணாநிதி.

இல. கணேசன் அறிக்கை:

இதற்கிடையே இந்துத்துவா குறித்து வாஜ்பாய் கூறிய கருத்துக்களை நாடு முழுவதும் பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும்என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரான இல. கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், உச்சநீதிமன்றம் அளித்த விளக்கங்களைத்தான் வாஜ்பாயும் கூறியுள்ளார்.

இந்துத்துவா குறித்து வாஜ்பாய் கூறிய கருத்துக்கள் யாவும் தேசியத் தன்மை வாய்ந்தவை. மதச்சார்பற்றகருத்துக்களை உள்ளடக்கியவை.

வாஜ்பாயின் இந்தக் கருத்துக்களை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராட்ட வேண்டும். அவ்வாறு அல்லாமல்அவர்கள் ஏன் பதற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கணேசன்.

x uĀ APmkPЦlt;/b>

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X