வைகா மீதான குற்றப் பத்திரிக்கை ஏற்பு: 13ம் தேதி வழக்கு விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையை பொடா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன் ஒத்தி வைத்தார்.

விடுதலைப் புலிகளை ஆதரித்ததாக வைகோ மற்றும் 8 மதிமுகவினரைக் கைது செய்து கிட்டத்தட்ட 160 நாட்களுக்குப் பின்னர்கடந்த வாரம் தான் போலீசார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது. கிட்டத்தட்ட 518 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டு 2ம் தேதி முடிவு அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக வைகோ உள்ளிட்ட 9மதிமுகவினரும் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.

அப்போது பேசிய நீதிபதி, குற்றப் பத்திரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் இந்த வழக்கு விசாரணை வரும் 13ம் தேதிக்குமீண்டும் நடக்கும் என்றும் அறிவித்தார். அன்றைய தினம் வரை 9 பேரின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்தார். 13ம் தேதிகுற்றப்பத்திரிக்கையின் நகல் 9 பேருக்கும் வழங்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

இது குறித்து வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,

பொடா சட்டத்தின் 21(2)(a), 21 (3), 21(4)ம் பிரிவுகளின் கீழ் தான் குற்றப் பத்திரிக்கையை க்யூ பிராஞ்ச் போலீசார் தாக்கல்செய்யதுள்ளனர் என்றார்.

பேச்சுரிமையைத் தடுக்கும் இந்த 21வது பிரிவை எதிர்த்துத் தான் வைகோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார் என்பதுநினைவுகூறத்தக்கது.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,

பொடா சட்டத்தை நான் எங்கும் இதுவரை ஆதரித்துப் பேசியதில்லை. என் மீதான வழக்கை நானே சந்திப்பேன். இதில் மத்தியஅரசு தலையிடுவதை நான் விரும்பவில்லை.

என் கைதை எதிர்த்து கையெழுத்துப் போட மாட்டேன் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏவான ராஜா கூறியது அவரது சொந்தக்கருத்தாகும். அதே நேரத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா தவறான அணுகுமுறை தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வாடுவதற்கு காரணமாகும். அவர்தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளாத வரை விடிவு கிடைக்காது. இதனால் இதில் பிரதமர் வாஜ்பாய் தான் தலையிட்டுதமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அதே போல பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்கக் கூடிய பலமோ, அரசியல் தைரியமோஜெயலலிதாவுக்குக் கிடையாது. இந்த அணை உருவானால் கோவை உள்ளிட்ட பகுதிகள் வறண்டுவிடும். இதனால், இதில் மத்தியஅரசு தான் தலையிட்டு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார் வைகோ.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+