இம்மாத இறுதியில் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபை இம்மாத இறுதியில் கூட உள்ளது. பஸ்கள் தனியார்மயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளைஎதிர்க் கட்சிகள் கிளப்ப உள்ளதால் இந்தக் கூட்டத் தொடர் மிகப் பரபரப்பாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முதலில் நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தை ஆளுநர்தான் தொடங்கி வைப்பார்.அதேபோல் ஆண்டு இறுதியில் ஆளுநர் முறைப்படி சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைப்பார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சட்டசபைக் கூட்டம் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இது தொடர்பாக சென்னைதலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் காளிமுத்து கூறுகையில்,
இம்மாத இறுதியில் சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் சட்டசபைக்கூட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.
தமாகா எம்.எல்.ஏக்களான குமாரதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் விஷயத்தில் இன்னும் பழைய நிலையே தொடர்ந்துநீடிக்கிறது. அவர்கள் தமாகாவிலேயே நீடிப்பார்கள்.
தேர்தல் கமிஷனுடன் இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக குமாரதாஸ் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் என்றார் காளிமுத்து.
இந்த சட்டசபைக் கூட்டத் தொடரின்போது விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து, பஸ்கள் தனியார் மயம்உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
-->












Click it and Unblock the Notifications