காவிரி: வாஜ்பாய் உடனடியாக தலையிட மார்க்சிஸ்ட் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகி விடாமல் பாதுகாக்க, காவிரி நீரைத் திறந்துவிடகர்நாடகத்திற்கு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட வேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில்,

காவிரி ஆணையக் குழுக் கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதுவரை சம்பா பயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். எனவே இவ்விஷயத்தில்பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும்.

சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக, காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசை பிரதமர்வற்புறுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு கைவிட வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல்ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி உயர்த்துவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் ஆகியதீர்மானங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

""தமிழக மக்களும் தான்..."":

இதற்கிடையே பெங்களூரில் 90வது தேசிய அறிவியல் மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர்வாஜ்பாய் டெல்லி திரும்பும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பேசினார்.

அப்போது சில கன்னட பத்திரிக்கையாளர்கள் அவரிடம், கர்நாடகத்தில் பெரும் வறட்சி நிலவுகிறேதே. காவிரிவிஷயத்தில் கர்நாடக மக்களை நீங்கள் காப்பீர்களா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த வாஜ்பாய், கர்நாடக மக்களைப் போலவே தமிழக மக்களும் தான் நீர் இல்லாமல் தவித்துவருகின்றனர். இது குறித்து 13ம் தேதி கூடும் காவிரி ஆணையக் கூட்டத்தில் பேசுவோம் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+