திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளியை உடைத்த போலீஸ்: தரத்தை சோதிக்கிறார்களாம்
சென்னை:
திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளின் கட்டட தரத்தை சோதிப்பதற்காகமீண்டும் இடிக்க ஆரம்பித்துள்ளனர்சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை நகரில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் கட்டுமானப் பணியில் முறைகேடுநடந்ததாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்காக மேம்பாலங்கள் சிலவற்றில் துளை போட்டும், இடித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சி.பி.சி.ஐ.டி.அதிகாரியான முகமது அலி ஒரு பாலத்தை தனது பூட்ஸ் காலால் உதைத்துப் பார்த்துக் கூட சோதித்து நகைப்புக்குஉள்ளானார்.
இந் நிலையில் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளையும் உடைத்தும் சோதனை நடத்தும்பணியில் சி.பி.சி.ஐ.டி. ஈடுபட்டுள்ளது. இதற்கு திமுக மற்றும் பிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இடிக்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திலும் வழக்கும்தொடரப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிகள் இடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல மாநகராட்சி பள்ளிகளையும், கட்டங்களையும் இடித்துசோதனை நடத்தினர் சி.பி.சி.ஐ.டி. சோதனை நடத்தினர்.
ஆழ்வார்ப்பேட்டை பீமண்ண கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று சோதனை நடந்தது.அப்போது பள்ளியின் கதவுகள், ஜன்னல்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
இந்தப் பள்ளி டி.ஆர். பாலுவின் தொகுதி மேம்பாட்டு நிதியுதவியின் கீழ் கட்டப்பட்டது. அப்போது சென்னைமேயராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications