ஹஜ்: இந்தியர்களுக்காக சவுதியில் சிறப்பு ஏற்பாடுகள்
துபாய்:
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இந்தியாவில் இருந்து வரும் முதல் அணி நாளை சவுதி தலைநகர் ஜெட்டாவை அடைகிறது.அவர்களைத் தங்க வைக்கவும், பயணத்துக்காகவும் வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.
ஹஜ் பயணிகளுக்காக இந்தியாவின் 11 நகரங்களில் இருந்து 247 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஏர் இந்தியா தவிர,சவுதி ஏர்லைன்சும் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. இந்தப் புனிதப் பயணம் முடிந்து கடைசி இந்திய விமானம் வரும் மார்ச்16ம் தேதி ஜெட்டாவில் இருந்து புறப்படும்.
மெக்காவில் இவர்களைத் தங்க வைக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெக்காவின் புனித மையமான ஹரம்பகுதியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் 315 விடுதிகள் இந்தியர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளில் லிப்ட்கள், டெலிபோன்கள், சமைல் அறைகள், கேஸ் அடுப்புகள், பிரிட்ஜுகள் ஆகிய வசதிகள் உள்ளன.
அதே போல மதீனாவில் புனித மையமான நபிகள் மசூதியில் இருந்து 750 மீட்டர் தொலைவிலேயே இவர்கள் தங்க வைக்கப்படஉள்ளனர். இதற்காக 9 காண்ட்ராக்டர்களுடன் இந்திய ஹஜ் கமிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டு விடுதிகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரத்தின் வெப் சைட்டைத் தொடர்பு கொள்ளலாம்.www.cgijeddah.com என்ற இந்த வெப்சைட்டில் ஹஜ் பயணம் குறித்த அனைத்து விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்திய ஹஜ் கமிட்டியிடம் விவரங்கள் கேட்க pilgrim@cgijeddah.com என்ற ஈ-மெயில் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்திய ஹஜ் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க 190 டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள் கொண்ட குழு ஏற்கனவே ஜெட்டாவந்துவிட்டது. மெக்காவில் 9 மருத்துவமனைகளையும், 20 படுக்கைகள் கொண்ட ஒரு நர்சிங் ஹோமையும், மதீனாவில் 4மருத்துவமனைகளையும் இந்திய ஹஜ் கமிட்டி அமைத்துள்ளது.
கிட்டத்தட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஹஜ் பயணிகளை நிர்வகிக்க மட்டும் 150 அதிகாரிகள் ஜெட்டா அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். மேலும் 400உள்நாட்டினரை வேலைக்கு அமர்த்தி பயணிகளுக்கு உதவவும் சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
-->


