தமிழக வக்கீல்களுக்கு புது இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள குழு இன்சூரன்ஸ் திட்டத்தின்படிபணிக்காலத்தின்போது மரணமடையும் வக்கீல்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் காப்பீட்டுத் தொகைவழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

வழக்கறிஞர்கள் நல நிதியில் உறுப்பினராக சேரும் வக்கீல்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதிபடைத்தவர்கள் ஆவர். தற்போது மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 44,000 வக்கீல்கள் உள்ளனர். இவர்களில்13,000 பேர் மட்டுமே வழக்கறிஞர் நல நிதியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின்படி, பணிக்காலத்தின்போது விபத்தில் இறக்கும் வக்கீல்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்வழங்கப்படும். அல்லது மரணமடையும் வக்கீல்களின் குழந்தைகளுக்கு படிப்பு உதவித் தொகையாக தலாரூ.50,000 வழங்கப்படும்.

மருத்துவ செலவுக்கான பில்களை சமர்ப்பித்து ரூ.25,000 பணம் பெற்றுக் கொள்ளவும் இந்த இன்சூரன்ஸ்திட்டத்தில் வசதி உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் வக்கீல்கள் 2 ஆண்டுகளுக்கு ரூ.150 பிரீமியம் கட்ட வேண்டும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+