ஹைதராபாத்திலிருந்து ஜெ. சென்னை திரும்புவதில் தாமதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலைதான் சென்னைக்குத்திரும்புகிறார்.
சுமார் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காகக் கடந்த 24ம் தேதி ஹைதராபாத் சென்றார் ஜெயலலிதா.
அவருடைய தோழி சசிகலாவும், செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் அவருடன் ஹைதராபாத் சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஜெயலலிதா சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைதான் ஜெயலலிதா சென்னை திரும்புவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications