ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் 2 காதல் ஜோடிகள் தற்கொலை
திருச்சி:
திருமணத்திற்கு முன்பு ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் 2 இளைஞர்களும், அவர்களுடைய 2 காதலிகளும்தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் மற்றும் சுரேஷ். இருவரும் சென்னையில் வேலை பார்த்துவந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில் அம்பிகா என்ற பெண்ணை தர்மராஜ் காதலித்தார். அதேபோல, சுரேஷும் பிரபாவதி என்றபெண்ணும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு நால்வரின் பெற்றோரும் பச்சைக் கொடி காட்டி விட்டனர். இருப்பினும், பிரபாவதி மற்றும்அம்பிகா படித்து முடிந்த பின்தான் திருமணம் செய்து தருவதாகக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் உற்சாகத்தில் இருந்த பிரபாவதியும், அம்பிகாவும் வீட்டுக்குத்தெரியாமல் சென்னைக்குச் சென்றனர். அங்கு தங்கள் காதலர்களோடு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். பின்னர்திருச்சி திரும்பினர்.
ஆனாலும் இவ்விஷயம் எப்படியோ அவர்களின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. கல்யாணம் செய்துகொள்வதாக உறுதி கூறியிருந்த நிலையிலும், பொய் சொல்லி விட்டு காதலர்களோடு ஊர் சுற்றியதை பெற்றோர்கள்கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த அம்பிகாவும், பிரபாவதியும் நம்மைப் பிரித்தாலும் பிரித்து விடுவார்கள் என்று தங்களதுகாதலர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து இரண்டு காதல் ஜோடிகளும் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தனர்.
புங்கனூரில் உள்ள வயல்காட்டுக்கு சென்ற நான்கு பேரும் அங்கு பாலில் விஷத்தைக் கலந்து குடித்தனர். சிறிதுநேரத்திலேயே நால்வரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் புங்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications