மதமாற்ற தடைச் சட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உள்துறை மற்றும் சட்டத்துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், தனி மனித உரிமைகளில் தலையிட அரசுக்கு உரிமையில்லை என்றும், எனவே இந்தச் சட்டம்தேவையில்லாத ஒன்று என்றும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
இது தொடர்பாக மூன்று வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும்சட்டத் துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-->












Click it and Unblock the Notifications