அரிசி கடத்தல் கும்பலுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரேசன் அரிசியைக் கடத்திய 4 பேருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை எழும்பூர் 15-வது பெருநகர மாஜிஸ்திரேட்அலமேலு நடராஜனுக்கு உயர் நீதிமன்றம் கடும் டோஸ் விட்டுள்ளது.

உத்திரமேரூரில் இருந்துசென்னைக்கு ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக லிங்கராஜா, முத்து ராஜா, முகம்மது சலீம்மற்றும் முருகேசன் ஆகிய நான்கு பேரை சிவில் சப்ளைஸ் சிஐடி போலீஸார் கைது செய்து 8-வதுமெட்ரோபாலிடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நவம்பர் 22ம் தேதி வரை காவலில் வைத்தனர்.

அதே நாளில், கைதான 4 பேரின் சார்பிலும் 15-வது கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அப்போது கடத்தல் தொடர்பாக முறையான விசாரணை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றுகூறி 4 பேரையும், மாஜிஸ்திரேட் அலமேலு நடராஜன் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அப்போது, அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க கூடுதல் அரசு வக்கீல் கால அவகாசம் கோரியும் அதை காதில்வாங்கவே நீதிபதி மறுத்து விட்டார்.

இதையடுத்து அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிபாக்கியராஜ், மாஜிஸ்திரேட் அலமேலு நடராஜனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது உத்தரவில், ஜாமீன் உத்தரவை எதிர்க்கவும், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கவும் அரசு வக்கீலுக்குஅவகாசமே கொடுக்காமல், அவசர அவசரமாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இந்தசம்பவத்திற்குப் பின்னணியில் ஏதோ நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.

கடத்தப்பட்ட அரிசி ரேஷன் அரிசிதான் என்பதை அரசுத் தரப்பு தனது முதல் தகவல் அறிக்கையில்குறிப்பிடவில்லை என்று மாஜிஸ்திரேட் கூறுவதை ஏற்க முடியாது. இதனால் வழக்கில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

இந்தக் காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குஜாமீன் வழங்க வேண்டும் என்று முன் கூட்டியே முடிவுடன் வந்துள்ளார் மாஜிஸ்திரேட் என்று தெரிகிறது.

அதனால் தான் விளக்கம் அளிக்க அரசு வக்கீலுக்கு அவகாசம் அளிக்க அவர் மறுத்துள்ளார் என்று கடுமையாகக்கூறினார் நீதிபதி பாக்கியராஜ்.

கடத்தப்பட்ட அந்த ரேசன் அரிசியின் மொத்த மதிப்பு ரூ. 9 லட்சமாகும். மொத்தம் 300 சாக்கு மூட்டைகளில் இந்தரேசன் அரசியை இக் கும்பல் உத்திரமேரூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+