சாத்தான்குளத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க. ஆய்வு
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதாக பா.ஜ.க.கூறியுள்ளது.
இத் தொகுதியில் போட்யிடப் போவதில்லை என பா.ம.க. அறிவித்துவிட்டது. காங்கிரஸ் போட்டியிட வேண்டும் எனகம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. காங்கிரஸ் போட்டியிட்டால் திமுக தலைமையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று திரண்டுஆதரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
மொத்தத்தில் அதிமுகவுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று திரள முயல்கின்றன. ஆனால், இதில் பா.ஜ.க. மட்டும்சேராது என்பது உறுதியாகிவிட்டது. அதிமுக போட்டியிட்டால் அக் கட்சியை பா.ஜ.க. ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், திமுகவுடன் கூட்டணியைத் தானே முறித்துக் கொள்ள மத்திய பா.ஜ.க. தலைமை தயாராக இல்லை. இதனால்அதிமுகவுக்கு சாத்தான்குளத்தில் ஆதரவு தருவது குறித்து இன்னும் அக் கட்சியின் மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாமல்உள்ளனர்.
இந் நிலையில் திமுக போட்டியிட்டாலோ அல்லது திமுக ஆதரவுடன் காங்கிரஸ் போட்டியிட்டாலோ அதை எதிர்த்துப்போட்டியிடுவது குறித்தும் பா.ஜ.க. யோசித்து வருகிறது.
சாத்தான்குளத்தில் போட்டியிட வேண்டும் என சமீபத்தில் வேலூரில் கூடிய பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அதே போல தனித்துப் போட்டியிட வேணடும் என்று தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.கவும் தீர்மானம்போட்டுள்ளது.
இதையடுத்து அங்கு போட்டியிடுவது குறித்துப் பரிசீலிக்க 3 பேர் குழுவை மாநில பா.ஜ.க. அமைத்துள்ளது. மத்தியவிளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சட்டசபை பா.ஜ.க. துணைத் தலைவர்லட்சுமணன், எம்.எல்.ஏவான எச்.ராஜா ஆகியோர் இக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் எச். ராஜாவும் லட்சுமணனும் வெளிப்படையாகவே திமுகவையும் கருணாநிதியும் விமர்சித்துப் பேசி வருபவர்கள். வைகோகைதை எதிர்த்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட மறுத்தவர் ராஜா. அதிமுகவுடன் கூட்டணியைஆதரிப்பவர்களில் மிக முக்கியமானவர் இவர்.
இக் குழு சாத்தான்குளம் சென்று ஆராயும் என்றும், தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. பொறுப்பாளர்களிடம் பேசிவிட்டு மாநிலத்தலைவர் கிருபாநிதியிடம் போட்டியிடாலாமா வேண்டாமா என்று அறிக்கை தரும். இதன் அடிப்படையில் மாநில செயற்குழுமுடிவெடுத்து அதை பா.ஜ.கவின் மத்திய தேர்தல் குழுவிடம் மாநிலத் தலைமையிடம் சொல்லும்.
அதன் பின்னர் போட்டியிடுவது குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும்.
திமுக இன்னும் காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததால் தங்களது நிலையையும் தெளிவாக்கிவிடாமல் இருக்கபா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளைக் குழப்பத்தில் வைக்கவே இந்தத் தனித்துப் போட்டி குறித்த ஆராய்ச்சியில் அக் கட்சிஈடுபட்டுள்ளது.
திமுகவின் அடுத்த நிலையைப் பொறுத்தே பா.ஜ.கவின் நிலை அமையும். காங்கிரஸ் வேட்பாளரை திமுக ஆதரித்தாலோ, அல்லதுகாங்கிரஸ் ஆதரவுடன் திமுக போட்டியிட்டாலோ அதிமுகவுடன் பா.ஜ.க. கூட்டணி சேரும்.
அதைவிட்டுவிட்டு காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் திமுக தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.கவும் தனியே போட்டியிடும் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications