200 ஏழை குடும்பங்களுக்கு புது வீடுகள்: மாதா அமிர்தானந்த மயி மடம் ஏற்பாடு
மதுரை:
மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சார்பில் ராமேஸ்வரம் அருகே ஏழைகளுக்காக 200 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.வரும் 10ம் தேதி ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி இவற்றைத் திறந்து வைக்கவுள்ளார்.
பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மாதா அமிர்தானந்த மயி மடம், ஏழை மக்களுக்காக ஏராளமானநலத் திட்டப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் சுமார் 200 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டித் தரும் பணியிலும்மாதா அமிர்தானந்த மயி மடம் ஈடுபட்டது.
அதன்படி மாதா அமிர்தானந்த மயி தேவியின் பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் பெறப்பட்ட பணத்தைக்கொண்ட சுமார் 200 வீடுகள் ராமேஸ்ரம் அருகே உள்ள சம்பை கிராமத்தில் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை வரும் 10ம் தேதி ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி திறந்து வைக்கவுள்ளார்.
இந்த விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர்ஆகியோரும் இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
சுமார் 500 விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஒன்றையும் ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி அன்றுதுவக்கி வைக்கவுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications