கடும் சர்ச்சைகளுக்கு இடையில் புலிகள்-இலங்கை 4வது சுற்று பேச்சு நாளை தொடக்கம்
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 4வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைதாய்லாந்தில் தொடங்குகின்றன.
இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகி விட்டது. இதற்குள்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு தமிழர்கள் மீண்டும் குடியேறுவதில்பெரும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளை விட்டு ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றுபுலிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால்தான் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுவோம் என்று இலங்கைராணுவம் கூறுகிறது.
ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று ராணுவத்தினர் நிபந்தனை விதித்தது புலிகளுடைய கோபத்தைக்கடுமையாகத் தூண்டி விட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆயுதங்களைக் கீழே போடுவது என்பதுசாத்தியமே இல்லை என்றும் அவ்வியக்கம் உறுதியாகக் கூறிவிட்டது.
இதற்கிடையே புலிகள் தங்களுடைய "வாய்ஸ் ஆப் டைகர்ஸ்" வானொலி ஒலிபரப்பை நன்குமேம்படத்தியுள்ளனர். இதற்கான சக்தி வாய்ந்த கருவிகளை நார்வே நாட்டிலிருந்து அவர்கள் இறக்குமதிசெய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடுமையான கடிதம் ஒன்றைஎழுதவே, அதற்கு ரணிலும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு இடையே தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் என்ற இடத்தில் நாளை நான்காவது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் துவங்குகின்றன.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான அந்த இயக்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவினரும், இலங்கை அமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலான அரசுத் தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவினரும் தாய்லாந்து வந்து சேர்ந்து விட்டனர்.
புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, நாளை துவங்கும்பேச்சுவார்த்தையிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் பேச்சுவார்த்தைகளை சுமூகமாகக் கொண்டு செல்ல முயற்சிப்போம் என்று இரு தரப்பினருமே உறுதிஅளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications