மாறன் உடல்நிலையில் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலையில்நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பூஞ்சைத் தொற்று காரணமாக மாறனின் செயற்கை இருதய வால்வு பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வால்வுமாற்றப்பட்ட போதிலும் பூஞ்சைத் தொற்று அவருடைய ரத்தத்தில் கலந்ததால் அவருடைய நுரையீரல், கல்லீரல்மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டன.

இதனால் மாறனின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டது. சென்னை-அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து மாறனை அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காகசிங்கப்பூரிலிருந்து சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

அவ்விமானம் மூலம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள மெதாடிஸ்ட் மருத்துவமனைக்கு மாறன்கொண்டு செல்லப்பட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மாறனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாறனின் இருதயம் நன்றாகச் செயல்படுகிறது. நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின்செயல்பாடுகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம் இயல்பாக உள்ளது. பகலில் நன்றாக விழித்திருக்கிறார். வீல் சேர் மூலமாக தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு உள்ளாகவே அங்கும் இங்கும் சென்று வருகிறார்.

மாறனுக்குத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. எப்போதாவது ஒரு முறைதான்செயற்கை சுவாசக் கருவியின் மூலம் அவர் சுவாசிக்கிறார் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+