வெடிகுண்டு பதுக்கல்: அல்-உம்மா பாட்சா மீது 20ம் தேதி தீர்ப்பு
சென்னை:
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது, சிந்தாதிரிப்பேட்டைஉள்ளிட்ட சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தது ஆகிய வழக்குகளில் வரும் 20ம் தேதி தீர்ப்புவழங்கப்படவுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான வெடிகுண்டுகள்,வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக அல்-உம்மா தலைவர் பாட்சா உள்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி தடாநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஆயிஷா மற்றும் ஆரிபா பேகம் என்ற இரண்டு பெண்களும்அடங்குவர்.
அதேபோல சிந்தாதிரிப்பேட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வெடிகுண்டு விபத்துக்கள்தொடர்பான வழக்கிலும் இவர்கள் மீது பூந்தமல்லி தடா கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்குகளின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாட்சாஉள்ளிட்ட அனைவரும் நீதிபதி ராஜேந்திரன் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.
சமீபத்தில் காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் தான் அல்-உம்மாவின் இன்னொரு தலைவரான அன்சாரி, பாட்சாவின் மகன்சித்திக் அலி உள்ளிட்டோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இதில்4 பேருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
அல்-உம்மா பாட்சா மீது கோவை தொடர் குண்டு வெடிகுண்டு வழக்கும் விசாரணையில் உள்ளது. இப்போது சென்னையில்வெடிகுண்டுகளைப் பதுக்கிய வழக்கில் மட்டும் தான் தீர்ப்பு சொல்லப்பட உள்ளது.
கோவை தொடர்குண்டு வழக்கை சிறப்பு நீதிமன்றம் தனியே விசாரித்து வருகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications