சென்னை பள்ளியில் வெடிகுண்டு புரளி: மாணவர்கள், பெற்றோர் பீதி
சென்னை:
வடசென்னையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி மிரட்டலைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வடசென்னையில் உள்ள புனித மேரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் பால்ராஜுக்கு இன்றுகாலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து ராயபுரம் போலீசாருக்கு பால்ராஜ் தகவல் கொடுத்தார். பின்னர் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துஅவர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த போலீசார், அப்பள்ளியில் தீவிர சோதனைநடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கிடைக்கவில்லை.
இதையடுத்துதான் அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
ஆனாலும் இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவவே, வடசென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள்குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பியிருந்த பெற்றோர்களும் கடும் பீதியுடன் பள்ளிகளை நோக்கிப்படையெடுக்க ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து வடசென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகப் புரளியைக் கிளப்பிய மர்ம நபரைத் தேடும் பணியில்போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications