மீண்டும் டி.ஜி.பியானார் ராஜகோபாலன்: நெயில்வால் திடீர் நீக்கம்- ஜெ. அதிரடி
சென்னை:
தமிழக காவல்துறை தலைவரான டி.ஜி.பி. நெயில்வால் திடீரென இன்று மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் டி.ஜி.பி.ஆர். ராஜகோபாலன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று காலை நடந்த மனித உரிமைகள் மாநாட்டில் நெயில்வால் பேசிக் கொண்டிருந்தபோது அவரது பதவிபறிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டது. ஒரு போலீஸ்காரக் ஓடிவந்து அவர் காதில் இதைச் சொல்ல முகம் தொங்கிப் போய்மாநாட்டில் இருந்து வெளியேறினார் நெயில்வால்.
ஹைதராபாத்தில் தனது தோழி சசிகலாவுடன் ஒரு வார காலம் ஓய்வெடுத்துவிட்டுத் திரும்பிய பின் முதல்வர் ஜெயலலிதாசெய்துள்ள முதல் அதிரடி மாற்றம் இது.
கடந்த மாதம் வரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றி மாற்றிப் பந்தாடி வந்த ஜெயலலிதா இப்போதுஐ.பி.எஸ். அதிகாரிகள் பக்கம் திரும்பியுள்ளார்.
இப்போது டி.ஜி.பியாகி உள்ள ராஜகோபாலன் திமுக ஆட்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராகவும், பின்னர்டி.ஜி.பியாகவும் இருந்தவர். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.
இதனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவரை முதல்வர் ஜெயலலிதா மாற்றினார். அவரை போலீஸ் பயிற்சிக் கல்லூரியின்தலைவராக்கினார். ராஜகோபாலனுக்குப் பதிலாக ரவீந்திரநாத் அப் பதவியில் நியமிக்கப்பட்டார்.
துணைப் பிரதமர் அத்வானிக்கும் நெருக்கமானவரான ராஜகோபாலன் அவரது உதவியை நாடினார். தன்னை மத்திய அரசுப்பணிக்கு மாற்றுமாறு ராஜகோபாலன் கேட்டுக் கொண்டார். அவருக்கு நல்ல பதவி தர அத்வானி முன் வந்தார். ஆனால்,ராஜகோபாலனை மாநில அரசுப் பதவியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்தார் ஜெயலலிதா.
ஆனால், அத்வானி கொடுத்த பிரஸ்ஸர் காரணமாக ராஜகோலனை விடுவித்தார். இதையடுத்து மத்திய அரசுப் பணிக்குச் சென்றஅவரை கறுப்புப் பூனைப் படைப் பிரிவின் தலைவராக அத்வானி நியமித்தார்.
ஆனால், சில மாதங்களிலேயே அந்தப் பதவியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார் ராஜகோபாலன். மீண்டும் மாநிலஅரசுப் பதவிக்கு வந்தார். இதையடுத்து ஜெயலலிதா இவரை அதிகாரம் ஏதும் இல்லாத சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின்தலைவராக (டப்பா பதவி) நியமித்தார்.
பெண் போலீசாரிடமே தனது லீலைகளைக் காட்டுவதாக ரவீந்திரநாத் மீது புகார் வந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அப் பதவியில் நெயில்வால் நியமிக்கப்பட்டார்.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் மிக அமைதியாகவே தனது வேலைகளில் ஈடுபட்டு வந்தார் ராஜகோபாலன். இந்நிலையில் மீண்டும் அவரை மாநில டி.ஜி.பியாக முதல்வர் ஜெயலலிதா இன்று நியமித்துள்ளார். துணைப் பிரதமர் அத்வானியின்பரிந்துரையால் தான் இவருக்கு இப் பதவி தரப்பட்டதாகத் தெரிகிறது.
ஒதுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு சமீபகாலமாகவே விமோச்சனம் கிடைத்து வருகிறது. முன்பு அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவுத்தலைவராக இருந்த அலெக்சாண்டரை மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். அகதிகள் மறுவாழ்வுப் பிரிவின்தலைவராக ராமேஸ்வரத்தில் வெறும் ஜீப் மட்டுமே கொண்ட பதவியில் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இப்போது அலெக்சாண்டர் மீண்டும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து அவரை மீண்டும்சென்னைக்குக் கொண்டுவந்துவிட்ட ஜெயலலிதா அவரிடம் முக்கிய அசைன்மெண்ட்களைத் தர ஆரம்பித்துள்ளார்.
இதனால் தமிழக காவல் துறையில் பெரும் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் இதுவரை எந்தப் புகாரிலும் சிக்காமல் செயல்பட்டு வந்த நெயில்வால் டி.ஜி.பி. பதவியில் இருந்துதூக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் டி.ஜி.பியாக இருந்த ராஜகோபாலன் மீண்டும் அப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இதுவரை எந்தப் புகாரிலும் சிக்காமல் செயல்பட்டு வந்த நெயில்வால் டி.ஜி.பி. பதவியில் இருந்துதூக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் டி.ஜி.பியாக இருந்த ராஜகோபாலன் மீண்டும் அப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் உறவினர் தான் ராஜகோபாலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை இம் மாற்றம் நடந்தது. பிற்பகலில் ராஜகோபாலன் டி.ஜி.பியாக பதவியேற்றுக் கொண்டார். நெயில்வாலுக்கு என்னபொறுப்பு தரப்பட்டுள்ளது என்று அரசு இன்னும் சொல்லவில்லை.
சமீபகாலமாவே பா.ஜ.க. தலைமையிடம் ஒட்டி உறவாடி வரும் அதிமுக அரசு அத்வானிக்கு நெருக்கமான அதிகாரியைமாநிலத்தின் உயர் போலீஸ் பதவியில் நியமித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் தலைமைச் செயலாளர்களும் டி.ஜி.பியும் 3 முறை மாற்றப்பட்டுவிட்டனர்.
இப்போது ராஜகோபாலனுக்கும் 3 மாதம் மட்டுமே பதவிக் காலம் உள்ளது. இதன் பின்னர் டி.ஜி.பியை மீண்டும் முதல்வர்ஜெயலலிதா மாற்ற வேண்டும் அல்லது அவருக்கு பதவி நீட்டிப்பு தந்தாக வேண்டும்.
அதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை:
டி.ஜி.பியை அதிரடியாய் மாற்றம் செய்த உத்தரவை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதா காலை நிதித்துறை அதிகாரிகளுடன் தீவிரஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்து அவர் விவாதித்தாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications