திண்டுக்கல் நகை வியாபாரி வீட்டில் ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ளநகை, பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
திண்டுக்கல் ராமசாமி நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ஜெயராமன். இவர் சமீபத்தில் தன் வீட்டைப் பூட்டிவிட்டுகுடும்பத்தினருடன் பெங்களூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஊர் திரும்பிய ஜெயராமன், வீட்டுக்குள் உள்ள பீரோவும் லாக்கரும்உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
அதிலிருந்த ஐந்து கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி மற்றும் ரூ.10 லட்சம் பணம் ஆகியவைகொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளும்திருடப்பட்டிருந்தது.
வீட்டின் பின்புறம் வழியாகத்தான் கொள்ளையர்கள் நுழைந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயராமன் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். மோப்ப நாயுடன் அவருடையவீட்டுக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications