நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கு: ஜான் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் நிதி நிறுவன அதிபரான விவேக் என்பவரைக் கொலை செய்த வழக்கில் தமிழக முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான் பாண்டியன் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் விவேக் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இவர் ஊத்துக்குளி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்.
இந்தக் கொலை தொடர்பாக ஜான் பாண்டியன், தொழிலதிபர் வெங்கட்ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சடையாண்டி இன்று தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜான் பாண்டியன், வெங்கட்ரமணா உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனைவழங்கி நீதிபதி சடையாண்டி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் ஜான் பாண்டியனுக்கு ரூ.1 லட்சமும், வெங்கட்ரமணாவுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதித்தும் நீதிபதிஉத்தரவிட்டார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியம் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தத் தீர்ப்பு கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அடிதடி அரசியல்வாதி" ஜான் பாண்டியன்:
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஜான் பாண்டியன் எப்போதுமே பரபரப்பான அரசியலில்ஈடுபடுபவர்.
அவரை அந்த மாவட்டத்திற்குள்ளேயே வரக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்கு பல்வேறுஅடிதடிகளில் நேரடியாகவே சம்பந்தப்பட்டவர்.
கடந்த 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து சென்னை எழும்பூர் தனித் தொகுதியில்போட்டியிட்டார்.
தேர்தலன்று நடந்த வாக்குப் பதிவின்போது திமுக வேட்பாளரான பரிதி இளம்வழுதி கடுமையாகத் தாக்கப்பட்டார்.ஜான் பாண்டியன்தான் தன் ஆதரவாளர்களோடு வந்து பரிதியைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஜான் பாண்டியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக பரிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அந்தத் தேர்தலில் பரிதிவெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகியதும் குறிப்பிடத்தக்கது.
ஜான் பாண்டியன் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை வழக்குகளும் உள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications