புலிகள்-இலங்கை 4வது சுற்று பேச்சு தொடங்கியது
பாங்காக் (தாய்லாந்து):
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 4வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை இன்று காலைதாய்லாந்தின் நகோம் பதோம் நகரில் தொடங்கியது.
வடக்கு இலங்கையில் தமிழர்கள் மீண்டும் குடியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அங்கு குவிக்கப்பட்டுள்ளஇலங்கை ராணுவத்தினரை அகற்ற வேண்டும் என்று புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால்தான் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுவோம் என்று இலங்கைராணுவம் கூறுகிறது. ஆனால் புலிகள் இதற்கு மறுக்கவே, அப்பகுதிகளை விட்டு ராணுவமும் வெளியேற மறுத்துவருகிறது.
இந்நிலையில் இன்று காலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள்துவங்கின.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான அந்த இயக்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவினரும், இலங்கை அமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலான அரசுத் தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவது குறித்தும், வடக்கு இலங்கையிலிருந்து ராணுவம் வெளியேறுவதுகுறித்தும் தற்போதைய பேச்சுவார்த்தைகளின்போது தீவிர ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகள் குறித்த விஷயங்களை மட்டுமே இப்போது பேசப்போவதாகவும், பாதுகாப்பு தொடர்பாக விவகாரங்களைப் பிறகு விவாதிக்கலாம் என்று இரு தரப்பினரும் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இன்றைய பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன் பாலசிங்கமும், பெய்ரிஸும் மிகவும் சிரித்த முகத்துடனேயேஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்து கைகுலுக்கிக் கொண்டனர். அதே சந்தோஷத்துடன் பத்திரிக்கைபுகைப்படக்காரர்களுக்கும் அவர்கள் போஸ் கொடுத்தனர்.
நேற்றே அவர்கள் இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசிக் கொண்டனர். முறைப்படியான சந்திப்புஇல்லையென்றாலும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற இந்தச் சந்திப்பு பெரிதும் உதவும் என்று கூறப்பட்டது.
ஒரு இக்கட்டான சூழ்நிலையை எட்டியுள்ள போதிலும், அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டும் எந்த வகையிலும்எந்த நேரத்திலும் இரு தரப்பினருமே முறித்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் என்று இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் எந்தவிதமான இழுபறியும் இல்லாமல் சுமூகமாகவேநடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications