உயர் நீதிமன்ற வக்கீலைத் தாக்கிய போதைக் கும்பல்
சென்னை:
சென்னையில் உயர் நீதிமன்ற வக்கீலை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகஇருக்கிறார். இவரது வீடு புரசைவாக்கத்தில் உள்ளது.
கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நடக்கவுள்ள ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் நாகேந்திரன்.
அப்போது வீட்டுக்கு அருகே வரும்போது 10 பேர் கொண்ட கும்பல் நாகேந்திரனையும், அவருடைய உறவினர்தவசி என்பவரையும் வழிமறித்தது.
பின்னர் உருட்டுக் கட்டைகளால் இருவரையும் அக்கும்பல் தாக்கத் தொடங்கியது. தாக்குதல் குறித்து அறிந்ததும்அக்கம் பக்கத்தில் இருந்தோர் நாகேந்திரனையும், தவசியையும் மீட்டு ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ளச் செய்தனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல், வீடு வீடாகச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி நாகேந்திரனைத் தேடத்தொடங்கியது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் வருவதைஅறிந்ததும் அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. தாக்குதலில் நாகேந்திரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்தப் பகுதியில் தினசரி வந்து கஞ்சா, அபின் போன்ற பொருட்களைஉபயோகிப்பவர்கள் என்று ஏற்கனவே சிலர் போலீஸாரிடம் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் நாகேந்திரன்தான் இவ்வாறு புகார் கொடுத்தது என்று எண்ணிக் கொண்டு அக்கும்பல் அவரைத்தாக்கியதாகக் கூறப்படுகிறது.
போலீஸார் அந்தக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications