சென்னையில் பள்ளிகள் இடிப்பு: பிரதமருக்கு டி.ஆர். பாலு கடிதம்
சென்னை:
தன் தொகுதிக்கு உள்ளிட்ட நகராட்சிப் பள்ளிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடித்து வருவது குறித்து பிரதமர்வாஜ்பாய்க்கு மத்திய வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் மேம்பாலங்களும், மாநராட்சிப் பள்ளிகளும் கட்டப்பட்டதில்ஏராளமான ஊழல் நடந்திருப்பதாகத் தற்போதைய அதிமுக ஆட்சி வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள பல மேம்பாலங்களும், மாநகராட்சிப் பள்ளிகளும் அவ்வப்போது இடித்துசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பாலுவின் எம்.பி. தொகுதிக்குட்பட்ட ஒரு பள்ளியில் சமீபத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனைநடத்தினர். திமுக இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதுதான் இந்தப்பள்ளியைத் திறந்து வைத்தார்.
அந்தப் பள்ளியின் கட்டடங்கள் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளதா என்பதைச் சோதனையிடுகிறோம் என்று கூறிக்கொண்டு அதன் கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை போலீசார் பெயர்த்து எடுத்துச் சென்றனர்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பாலு. அக்கடிதத்தில்,
தென் சென்னைப் பகுதியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டடங்களை தமிழகஅரசு சோதனை என்ற பெயரில் இடித்து வருகிறது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களை மாணவர்கள் பள்ளியில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும்போதே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடித்துச் சென்றுள்ளனர்.
இதனால் அந்தக் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செயல்கள் மூலம் தமிழகத்தில்என்ன ஆட்சி நடைபெறுகிறது என்பது குறித்து எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்பாலு.
-->


Click it and Unblock the Notifications
