அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வில் 35 சதவீத மாணவர்களே பாஸ்!
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வந்த பிறகுநடத்தப்பட்ட முதல் செமஸ்டர் தேர்வில் 35 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பாஸ் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 240க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து கடந்த மாதம் முதல் செமஸ்டர் (அதாவது 2வது ஆண்டு மாணவர்களுக்கான 3வது செமஸ்டர்) தேர்வுநடந்தது. இதில் 35 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பாஸ் செய்துள்ளனர். இது மாணவர்களுக்கும், அவர்களதுபெற்றோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஒரேபாடத்திட்டத்தின் கீழ் கற்கும் வகையிலுமே பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பாஸ் சதவீதம் படு பயங்கரமாக குறைந்திருப்பது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும்கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கடந்த தேர்வில் முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தார். ஆனால் இந்த முறைஅவர் தோல்வியடைந்துள்ளார்.
இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டம்தான் காரணம் என்று மாணவர்கள் குறை கூறுகிறார்கள்.அவசரக் கோலத்தில் திருத்தியமைக்கப்பட்ட அந்தப் பாடத் திட்டத்தை சரியாக புரிந்து கொள்ளவே முடியவில்லைஎன்றும் அவர்கள் தெரிவித்தனர்.
"கைனமேட்டிக்ஸ்" என்ற பாடத்தை கற்றுத் தர ஆசிரியர்களே அதிகமாகச் சிரமப்படுவதாகவும் அவர்கள்கூறுகிறார்கள். ஆசிரியர்களுக்கே புரியாதபோது, நாங்கள் எப்படி அந்தப் பாடத்தில் பாஸ் செய்ய முடியும் என்றும்மாணவர்கள் குமுறுகின்றனர்.
பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் பி.ஈ. முடித்தவுடன் அந்த மாணவர்களே ஆசிரியர்களாகநியமிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு உரிய பயிற்சியோ உயர் கல்வியை போதிக்கும் அளவுக்குபோதிய கல்வி அறிவோ இல்லை.
ஆசிரியர்களின் கல்வித் தரத்தை உயர்த்தாமல் பாடத்தை மட்டும் கடுமையாக்கினால் மட்டும் அத் திட்டம் தோல்விதான் அடையும் என்பதற்கு இந்த 35 சதவீத பாஸ் ஒரு நல்ல எடுத்துக் காட்டு
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications