அடாவடியாய் விளம்பர போர்டு: ஆற்காடு வீராசாமிக்கு தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை:
அனுமதியில்லாமல் விளம்பர போர்டுகள் வைக்கக் கூடாது என்று கூறிய மாநகராட்சி அதிகாரியைத் தாக்க முயன்றவிளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஊழியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
செவன்ஸ்டார் என்ற இந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின்தம்பியுமான தேவராஜன் தலைமறைவாகிவிட்டார்.
வீரசாமியின் தம்பியான தேவராஜன் சென்னையில் விளம்பரப் பலகைகளை வைக்கும் இந்த நிறுவனத்தை நடத்திவருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது விதிமுறைகளை இவரது நிறுவனம் பலமுறை மீறியுள்ளது.
ஆனால், அமைச்சரின் தம்பி என்பதால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் அரசுநிலத்தில் விளம்பர போர்டுகளை வைப்பது, முக்கிய சாலைகளில் விதிமுறைகளை மீறி போர்டுகள் வைப்பது என பலஅடாவடி வேலைகளைச் செய்துள்ளார் இந்த தேவராஜன்.
இந் நிலையில் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் விளம்பர போர்டுகளை வைக்கஇவரது செவன்ஸ்டார் என்ற நிறுவனத்தின் ஊழியர்களான ராஜசேகரன் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் முயற்சிசெய்து கொண்டிருந்தனர்.
இதற்கு இவர்கள் மாநகராட்சியின் அனுமதியே பெறவில்லை.
இதையடுத்து மாநகராட்சி உதவி பொறியாளர் தமிழழகன் இதில் தலையிட்டார்.
அவர்களிடம் இங்கு போர்டு வைக்க அனுமதி இல்லையே, எப்படி வைக்கிறீர்கள் என்று செவன்ஸ்டார் நிறுவனஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது ராஜசேகரனும், மகாலிங்கமும் சேர்ந்து தமிழழகனைத் தாக்க முயன்றனர்.
இதையடுத்து அபிராமபுரம் காவல் நிலையத்தில், தன்னைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி இருவர் மீதும்புகார் கொடுத்தார் அந்த அதிகாரி.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். நிறுவனத்தின் உரிமையாளரானவீராசாமியின் தம்பி தேவராஜன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications