இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிதி நெருக்கடி தொடர்வதால் இந்த ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்றுஅரசு அறிவித்து விட்டது. அதற்குப் பதிலாக ரூ.1,000 அட்வான்ஸ் மட்டுமே வழங்கப்படும் என்றும் அரசுதெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு போனஸ் கேட்டு அரசு ஊழியர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தனர். ஆனால் தீபாவளிபோனசும் கிடைக்கவில்லை. பொங்கலுக்கும் போனஸ் தரப்படவில்லை.

ஆனாலும் அதற்குப் பதிலாக வங்கிகள் மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 வரை கடன் வழங்க அரசு ஏற்பாடுசெய்தது. இதற்கான வட்டியையும் அரசே ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக ரூ.1,000 அட்வான்ஸ் மட்டுமே வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்காகஎந்தவிதமான வட்டியும் இன்றி மாதா மாதம் சம்பளத்தில் ரூ.100 பிடித்துக் கொள்ளப்படும்.

இருந்தபோதிலும் ஒவ்வொரு துறைக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே அட்வான்ஸுக்காகஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு துறையில் அதிக அளவாக 100 பேர் மட்டுமே அட்வான்ஸ் பெற இயலும்.மற்றவர்களுக்கு அட்வான்ஸ் நிச்சயமாகக் கிடைக்க வாய்ப்பில்லை.

ஊழியர்கள் போராட்டம்:

இந்த ஆண்டும் போனஸ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+