""சந்து முனையில் சிந்து பாடுவதா?"": எதிர் கட்சிகளுக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடிப் போராட வேண்டிய வேளையில், அவை ஒன்றுடன் ஒன்றுசந்து முனையில் சிந்து பாட வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திராவிட சித்தாந்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டு ஆரியக் கூடாரத்தில் முகாமிட்டு அந்தக் கூடாரத்தில் எச்சில்பதவி ரொட்டித் துண்டுகளுக்காகக் காத்துக் கிடப்பதாக திமுக குறித்தும் கருணாநிதி குறித்தும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் சமீபத்தில் கருத்து தெரிவித்தது.

இது தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது கருணாநிதி அதற்குப் பதிலளிக்கையில்,

எதிர்க் கட்சிகள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய வேளையில், எதிர்க் கட்சிகளுக்குள்ளேயே ஒன்றோடொன்றுசந்துமுனை சிந்து பாட வேண்டாம் என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.

அரசியல் பண்பாட்டுடன் கூடிய நமது அணுகுமுறையைக் கோழைத்தனம் என்று யாராவது கருதிக் கொண்டுமோதிப் பார்க்க வருவார்களேயானால், "வாழ்க வசவாளர்கள்" என்று அவர்களை வாழ்த்தி விட்டு அமைதியாக நம்பயணத்தைத் தொடருவோம் என்றார் கருணாநிதி.

சென்னை-அன்பகத்தில் அமைக்கப்படவுள்ள கண்ணகி சிலையின் கைகளில் இருந்த வளையலை அகற்றிவிட்டதாக வந்த செய்தி உண்மையா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, "செய்தி வந்தது உண்மைதான். வளையல் பற்றிய வாதம் வந்ததும் உண்மைதான்.ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அன்பகத்தில் அமையும் கண்ணகி தன் கையில் வளையலுடன்தான் அமையப்போகிறாள்" என்றார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+