காட்டாட்சியில்தான் பள்ளிகளை இடிப்பார்கள்: கருணாநிதி வர்ணனை
சென்னை:
காட்டாட்சியில் தான் பள்ளிகளை இடிப்பதும், ஜன்னல், கதவுகளை பெயர்த்தெடுத்துச் செல்வதும் நடைபெறும்என்று திமுக தலைவர் கருணாநிதி வர்ணித்துள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் மேயராக ஸ்டாலின் பதவியில் இருந்தபோது, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் தொகுதிமேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பள்ளிகளை சோதனை என்ற பெயரில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுபோலீஸார் இடித்து வருகின்றனர்.
கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை பெயர்த்தெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
பள்ளிகளின் கதவுகள், ஜன்னல்களை பெயர்த்தெடுத்துச்செல்வது என்பது காட்டாட்சியில்தான் நடைபெறும். ஊழல்நடந்திருப்பதாக நினைத்தால், பள்ளிகளைக் கட்ட காண்டிராக்ட் எடுத்த காண்டிராக்டர்கள், அதிகாரிகள் மீது தானேநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைவிட்டுவிட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளிக் கூடத்தையா இடிப்பது?
தமிழக டி.ஜி.பியை முதல்வர் மாற்றியிருப்பது அவரது உரிமை. அமைச்சர்கள், அதிகாரிகளை மாற்றம் செய்யமுதல்வருக்கு முழு உரிம்ை உண்டு. இதில் யாரும் குறை கூற முடியாது.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயற்சிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் கேரள அரசு விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும். அதேபோல தமிழக முதல்வரும் எடுத்த எடுப்பில் கேரள முதல்வருக்குக் கடிதம்அனுப்பியிருக்கக் கூடாது.
மாறாக, நீர்ப்பாசனத் துறை அமைச்சரை கேரளாவுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.
அதிமுகவைவிட பா.ஜ.க. தான் திமுகவை மிகவும் தாக்கிப் பேசி வருகிறது. இது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.பொது வேட்பாளர் என்ற முறை தமிழகத்தில் இதுவரை வெற்றி பெற்றதில்லை. சாத்தான்குளம் இடைத்தேர்தலுக்கும் இது பொருந்தும் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் பேட்டியை வைத்துப் பார்க்கும்போது, சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பொது வேட்பாளரைநிறுத்தும் எதிர்க்கட்சிகளின் யோசனை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications