தமிழர்களை குடியேற்றுவது குறித்து முக்கிய ஒப்பந்தம்
நாகோன் பாதோம் (தாய்லாந்து):
வட கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேறி அகதிகளாக வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான தமிழர்களை மீண்டும்குடியமர்த்துவது தொடர்பாக இலங்கை அரசுக்கும்ம், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
வட கிழக்குப் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து வெளியேறிய தமிழர்களை முதலில்குடியமர்த்தலாம் என இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று தாய்லாந்து நாட்டில்தொடங்கின.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் மீண்டும் குடியேறுவதற்குஇடையூறாக இருப்பதால்தான் அங்குள்ள ராணுவத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று புலிகள்கோரி வருகின்றனர்.
ஆனால், புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால்தான் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து வெளியேறுவோம்என்று ராணுவம் கூறி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான்காவது சுற்று பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த விவகாரம் தொடர்பாகபேச்சுவார்த்தையே கூட பாதிக்கப்படலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
இன்று காலை பேச்சு தொடங்கியதுமே ராணுவம் வெளியேறுவது குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று இருதரப்பினரும் முடிவு செய்துவிட்டனர்.
ராணுவத்தின் வசம் இல்லாத பகுதிகளில் தமிழர்களை முதலில் குடியமர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.இதற்கான காலக்கெடு, இதற்காகத் தேவைப்படும் நிதி ஆகியவை குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழர்களை மீண்டும் குடியேற்றுவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவது குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். தொடர்ந்து நாளையும் இது குறித்த விவாதம் தொடரும். 9ம் தேதி இப் பேச்சுக்கள்முடிவடைகின்றன. அதற்குள் ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
எதிரெதிரே முன்னாள் எதிரிகள்:
இலங்கை ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலான சாந்த கொட்டேகுடாவும் புலிகளின் கமாண்டரானகருணாவும் இந்த 4வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். கொட்டகுடா இப்போதுஅமைதிப் பேச்சுக் குழுவில் ஆலோசகராக சேர்க்கப்பட்டுள்ளார்.
கருணா மற்றும் கொட்டேகுடா தலைமையிலான இரு தரப்புப் படைகளும் 1997-98ம் ஆண்டில் மிக நீண்டபோரில் ஈடுபட்டன. 18 மாதங்கள் நடந்த இந்தப் போரில் இரு தரப்பிலும் 3,500 பேர் உயிரிழந்தனர்.
புலிகளை விரட்டியடித்த கொட்டடேகுடா தலைமையிலான ராணுவப் படை முக்கிய நெடுஞ்சாலையைக்கைப்பற்றியது. ஆனால், புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர்கொல்லப்பட்டனர்.
இரு படைகளுக்கும் தலைமை வகித்த எதிர்ரெதிர் தரப்பு கமாண்டர்கள் இன்று கைகுலுக்கி அமைதிப்பேச்சுவார்த்தைகளில் அமர்ந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.
ஜப்பான் அரசுக்கு பிரபாகரன் அழைப்பு:
வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தமிழர் பகுதி சீரமைப்புக்கு நிதி திரட்டும் மாநாடு தொடர்பானநடவடிக்கைகள் குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த நவம்பர்மாதம் நார்வேயில் நிதி திரட்டும் மாநாடு நடைபெற்றது என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க வன்னிக்கு வருமாறு ஜப்பானிய அரசின்வெளியுறவுத்துறை அமைச்சருக்கு புலிகள் தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், இந்தியாவுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இது குறித்து முடிவெடுக்கப்படும் என ஜப்பான் அரசுஅறிவித்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications