ஏசுவே கடவுள்.. போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தைக் கலக்கிய பெண்
சேலம்:
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண், ஏசுவே கடவுள் என்று கூறிக் கொண்டுபயங்கர கலாட்டாவில் ஈடுபட்டார். இதனால் ஆணையர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை சுமார் 4மணி நேரம் பெரும் பரபரப்பில் மூழ்கின.
சேலம் நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு பெண் வந்தார்.நடுத்தர வயதில் இருந்த அவர், ஆக்ரோஷத்துடன் உளவுப் பிரிவு அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அங்கிருந்தவர்களிடம்ஏசுவே கடவுள், அவரை நம்பாதவர்களுக்கு அழிவுதான் என்று கத்தியபடியே சென்றார்.
இதைப் பார்த்து மிரண்ட அலுவலக ஊழியர்கள், உடனடியாக அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது அந்தப் பெண், நான் என்ன பைத்தியமா? என்று கேட்டபடி கத்தினார்.
மிகவும் ஆக்ரோஷமாக இருந்த பெண்ணைப் பிடிக்க பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அந்தப் பெண்போலீசார் படாதபாடுபட்டு அந்தப் பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கும் விடவில்லை அந்த பெண்மணி. என்னைப் பைத்தியமாக நினைக்காதீர்கள், நீங்கள்தான் பைத்தியம் என்றுஆக்ரோஷமாய் கூறிய அப்பெண், காவலர்களையும் மீறிக் கொண்டு வெளியே வர முயற்சித்தார்.
இதையடுத்து அவரைப் அமுக்கி ஒரு அறையில் உட்ராக வைத்த போலீசார் சிறிது நேரத்தில் அமைதியான அப்பெண்ணை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.
இந்த களேபரத்தால் சுமார் 4 மணி நேரம் காவல் துறை ஆணையர் அலுலவகமும், மகளிர் காவல் நிலையம் கதிகலங்கின.
அந்தப் பெண் மன நிலை பாதிக்கபப்ட்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது. மருத்துவ பரிசோதனைகள் நடந்துவருகின்றன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications