தாமரைக்கனி தாக்கப்பட்ட வழக்கு: நாகை நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜர்
நாகப்பட்டினம்:
முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏவான தாமரைக்கனி தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த 1984ல் மயிலாடுதுறையில் தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினரை வைகோ, முன்னாள் திமுகஅமைச்சரான கோ.சி. மணி உள்பட சில திமுகவினர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டனர். வைகோ, கோ.சி.மணி மற்றும் இடும்பையன் ஆகிய மூன்று பேர் மீது மட்டும் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு சமீபத்தில் மீண்டும்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் கோ.சி. மணி தாக்கல் செய்த மனுவையும்நாகப்பட்டினம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தாமரைக்கனி தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் நாகப்பட்டினம்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோஇன்று நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுகிறார்.
இதற்கிடையே வைகோவும், கோ.சி. மணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மேல் முறையீட்டுமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications