காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை பந்த்
தஞ்சாவூர்:
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தக் கோரி தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் திட்டமிட்டபடி நாளை முழு வேலைநிறுத்தம்நடைபெறவுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுக, பாமக, மதிமுக,கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய எதிர்க் கட்சிகள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தத்திற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளைய வேலைநிறுத்தத்தின்போதுஇந்த மூன்று மாவட்டங்களிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் என்று வணிகர் சங்கங்கள்கூட்டமைப்பின் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
இதற்கிடையே விவசாயிகள் சங்கம் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதன்படி,
காவிரியில் நீர் திறந்துவிடப்படாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 20கிலோ அரிசி தர உடனடியாக உத்தரவிட வேண்டும்.
மேலும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,000 வீதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவேண்டும்.
ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானங்கள்தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக திருச்சியிலிருந்து சென்ற போலீஸ் வாகனம் ஒன்ற துவாக்குடி அருகேகவிழ்ந்து விழுந்ததில் ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications