புலிகள் தற்கொலை படையை கலைக்க சந்திரிகா வற்புறுத்தல்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தங்கள் வசம் வைத்துள்ள "கரும் புலிகள்" எனப்படும் தற்கொலைப் படை அமைப்பைக்கலைத்து விட வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இலங்கை இனப்பிரச்சனை போர்களில், அந்நாட்டு ராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தவர்கள் "கரும் புலிகள்".
இவர்கள் மூலம் பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல்களை புலிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.முக்கியமாக அரசியல் பேரணிகளின்போதுதான் "கரும் புலிகள்" வெடிகுண்டுகளைத் தங்கள் உடம்பில் மாட்டிக்கொண்டு வெடிக்கச் செய்வார்கள்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் பிரேமதாசா உள்ளிட்டவர்கள் கூட இதுபோன்ற தற்கொலைப் படைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
சந்திரிகாவைக் குறிவைத்துக் கூட ஒருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் கண்களில் காயத்துடன் அவர் தப்பிவிட்டார்.
எப்போதாவது ராணுவத்தினரிடம் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் கூட, தங்கள் கழுத்துகளில்எப்போதுமே மாட்டிக் கொண்டிருக்கும் குப்பிகளில் உள்ள சயனைடைத் தின்று தங்கள் உயிரை "கரும் புலிகள்"மாய்த்துக் கொள்வார்கள்.
கடைசியாக கொழும்பில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் "கரும் புலிகள்" அதிரடியாகப்புகுந்து பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தினர்.
இதில் இலங்கை போர் விமானங்கள் உள்ளிட்ட சில விமானங்கள் தகர்க்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் மட்டும்இலங்கை அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் புலிகளின் தற்கொலைப் படை கடைசியாகநடத்திய மிகப்பெரும் தாக்குதலாகும்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் மாதத்திலேயேபுலிகள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டபோது அவர்களுடைய நிலை முற்றிலுமாக மாறியது.
தொடர்ந்து 2002ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் அமலில் உள்ளது.புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்போது வெற்றிகரமாக நடந்துவருகின்றன.
இந்நிலையில்தான் "கரும் புலிகள்" அமைப்பை புலிகள் கலைத்துவிட வேண்டும் என்று சந்திரிகா தற்போதுவலியுறுத்தியுள்ளார்.
தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுக்களின் போதே இதை இலங்கை அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்சந்திரிகா விரும்புவதாக அவருடைய செய்தித் தொடர்பாளரான ஹாரிம் பெய்ரிஸ் நிருபர்களிடம் கூறினார்.
தாங்கள் உண்மையிலேயே அமைதி வழிக்குத் திரும்புகிறோம் என்று நினைக்கும் புலிகள் முதலில் இந்தத்தற்கொலைப் படையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.
புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று இலங்கை ராணுவம் ஏற்கனவே வலியுறுத்திவருவதும், அதைப் புலிகள் மறுத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதரின் பதவி நீடிப்பு:
இதற்கிடையே சந்திரிகாவின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கைக்கான நார்வே தூதரின் பதவிக் காலம்நீட்டிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு வானொலிக் கருவிகள் நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நார்வேதூதரான ஜான் வெஸ்ட்போர்க்கை சந்திரிகா கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இலங்கை அரசின் பல சுங்க விதிமுறைகளை மீறி ஜான் நடந்து கொண்டதாகக் கூறிய சந்திரிகா, இவ்விஷயத்தில்நார்வே அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் சந்திரிகாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தக்க பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இந்த மாதத்துடன் ஜானின் பதவிக் காலம் முடியவிருந்தது. ஆனால் அவருடைய பதவிக் காலத்தைஇலங்கை அரசு நீட்டித்துள்ளது.












Click it and Unblock the Notifications