இலங்கை-புலிகள் 4வது சுற்று பேச்சு முடிந்தது

Subscribe to Oneindia Tamil

நாகோம் பதோம்:

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 4வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடைந்தன.

கடந்த 4 நாட்களாக நடந்து வந்து இப் பேச்சுவார்த்தைகளில் அகதிகளாக வசித்து வரும் தமிழர்களை மீண்டும் வட-கிழக்குப்பகுதியில் குடியேற்றுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் ராணுவத்தினர் வசத்தில் இல்லாத பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை முதலில் குடியேற்றுவது என முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செயல் திட்டத்தையும் இரு தரப்பினரும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். ராணுவத்தின் வசம் உள்ளபகுதிகளில் தமிழர்களை குடியேற்றுவது குறித்துப் பின்னர் பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ நடவடிக்கையை வட கிழக்குப் பகுதியில் இருந்து வாபஸ் பெறுவது குறித்து இப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுஏற்படவில்லை.தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவது குறித்து இரு தரப்பினரும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டின் விவரங்களை நார்வேஅறிவிக்கும். அதில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவது குறித்த காலக்கெடு தொடர்பான விவரங்கள் இருக்கும்.தற்கொலை படை விவகாரம்:இதற்கிடையே தங்களின் தற்கொலைப் படைப் பிரிவான "கரும் புலிகள்" அமைப்பைக் கலைக்கப் போவதில்லை என்று புலிகள் அமைப்பு கூறிவிட்டது.புலிகள் தங்களுடைய தற்கொலைப் படைப் பிரிவைக் கலைக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வலியுறுத்தியிருந்தார்.நிருபர்களிடம் பேசிய புலிகளின் அரசியல் ஆலோசகர்சந்திரிகாவின் இந்தக் கோரிக்கை தேவையே இல்லாதது. புலிகள் அமைப்பு ஒரு பெரும் ராணுவத்தைக் கொண்டுள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்தவிஷயம்தான். எங்கள் ராணுவத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் "கரும் புலிகள்".கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் புலிகள்ஈடுபடவில்லை.மேலும் வட-கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் "கரும் புலிகள்" முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை.இன்னும் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. அதற்குள் கரும் புலிகள் பிரிவைக் கலைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்றார்.அதே நேரத்தில் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மிக வெற்றிகரமாக நடந்ததாக பாலசிங்கம், இலங்கை அரசின் அமைதிப் பேச்சுத் தலைவர் பெரிஸ்ஆகியோர் நிருபர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+