நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதம்: பா.ம.கவினர் மீது சந்தேகம்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை தொடர்பான அவதூறு வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகளுக்கு ராமதாசின் மகன் அன்புமணி நடத்தி வரும் "பசுமை தாயகம்" என்ற இயக்கத்தின் பெயரில்மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோடிக்கணக்கான சொத்து கொண்ட செங்கல்வராயன் அறக்கட்டளையை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை உயர்நீதிமன்றம் நியமித்தது. ஆனால், அவர் வன்னியர் இல்லை என்பதால் அவரிடம் அந்தப் பொறுப்பைத் தரக் கூடாதுஎன்று கூறி பா.ம.கவினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே. நடராஜன் மற்றும் மாதவன்ஆகியோரும் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கை நீதிபதி ஜெகதீசன் மற்றும் நீதிபதி தினகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இம்மூவரையும் இன்று ஆஜராகும்படி ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ராமதாசுக்கு நீதிபதிகள் கண்டனம்:
ஆனால் நடராஜனும் மாதவனும் மட்டும் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ராமதாஸ் ஆஜராகவில்லை.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் இன்று ராமதாசால் ஆஜராக முடியவில்லை என்று அவருடையவழக்கறிஞரான மாசிலாமணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட ஏன் டாக்டர் ராமதாஸ் ஆஜராகவில்லை? நீதிமன்றத்தை அவர்அவமதிக்கிறாரா?" என்று நீதிபதிகள் கடும் கோபத்துடன் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த மாசிலாமணி, டாக்டர் ராமதாஸ் எப்போதுமே நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்படுபவர்என்றார்.
மிரட்டல் கடிதத்தை வெளியிட்ட நீதிபதிகள்:
"அப்படியானால் "பசுமை தாயகம்" என்ற பெயரில் நீதிபதிகளாகிய எங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதே.இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?" என்று நீதிபதி தினகர் கட்டார்.
மேலும் அந்தக் கடிதத்தையும் மாசிலாமணியிடம் அளித்து, இதை நீங்களே படித்துப் பாருங்கள் என்று கூறினார்நீதிபதி தினகர்.
அதைப் படித்துப் பார்த்த பின், "இந்த மிரட்டல் கடிதம் உண்மையிலேயே யாரால் எழுதப்பட்டது என்பதுதெரியவில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் எப்போதுமே நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டுதான் நடந்துகொள்வார்" என்று நீதிபதிகளிடம் மாசிலாமணி கூறினார்.
"இந்தக் கடிதத்தை யார் அனுப்பியிருந்தாலும் சரி. இதற்கெல்லாம் நாங்கள் பயந்து விட மாட்டோம்" என்றும்அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் வரும் 24ம் தேதி ராமதாஸ் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று கூறி நீதிபதி ஜெகதீசனும், நீதிபதிதினகரும் இவ்வழக்கை ஒத்திவைத்தனர்.
-->












Click it and Unblock the Notifications